/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடுத்தடுத்து இருவர் தற்கொலை மகளிர் விடுதியில் ஆய்வு
/
அடுத்தடுத்து இருவர் தற்கொலை மகளிர் விடுதியில் ஆய்வு
அடுத்தடுத்து இருவர் தற்கொலை மகளிர் விடுதியில் ஆய்வு
அடுத்தடுத்து இருவர் தற்கொலை மகளிர் விடுதியில் ஆய்வு
ADDED : பிப் 10, 2024 12:26 AM
சென்னை, சென்னை - பூந்தமல்லி நெடுஞ்சாலை வேப்பேரியில், 'ஒய்.டபிள்யூ.சி.ஏ.,' மகளிர் விடுதி உள்ளது. அங்கு, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவாஞ்சலின் சிந்தியா, 24, என்பவர் தங்கி, எழும்பூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில், இளநிலை உதவியாளராக பணிபுரிந்தார்.
இவர், 2023, நவம்பரில், பணிக்கு சேர்ந்த 10 நாளில், தங்கி இருந்த விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதேபோல, அந்த விடுதியில் தங்கி இருந்த மற்றொரு பெண்ணும் துாக்கிட்டு தற்கொலை செய்து இறந்தார்.
அடுத்தடுத்து இரு பெண்கள் இறந்ததால், விடுதியில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, மாநில மகளிர் கமிஷனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட விடுதியில் மாநில மகளிர் கமிஷனின் தலைவர் ஏ.எஸ்.குமாரி, உறுப்பினர் வரலட்சுமி ஆகியோர், நேற்று ஆய்வு செய்தனர்.
ஏ.எஸ்.குமாரி கூறுகையில், ''ஒய்.டபிள்யூ.சி.ஏ.,' வளாகத்தில் ஐந்து மகளிர் விடுதிகள் உள்ளன. அங்குள்ள நிறை, குறைகள் குறித்து ஆய்வு செய்துள்ளோம். விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம்' என்றார்.