/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3வது மாடியில் இருந்து நாய்களை துாக்கி வீசியவரிடம் விசாரணை
/
3வது மாடியில் இருந்து நாய்களை துாக்கி வீசியவரிடம் விசாரணை
3வது மாடியில் இருந்து நாய்களை துாக்கி வீசியவரிடம் விசாரணை
3வது மாடியில் இருந்து நாய்களை துாக்கி வீசியவரிடம் விசாரணை
ADDED : நவ 12, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலையூர்: சேலையூர் அடுத்த மாடம்பாக்கம் பிரதான சாலை, வேங்கைவாசலில் புதிதாக கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து, வாலிபர் ஒருவர், இரண்டு நாய்களை அடித்து, அங்கிருந்து துாக்கி வீசியுள்ளார்.
இதுகுறித்து அறிந்த 'அல்மைட்டி' விலங்கு பாதுகாப்பு அமைப்பினர், சேலையூர் காவல் நிலையத்தில், நேற்று புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிந்து, நாயை துாக்கி எறிந்த, கட்டடப் பணியில் ஈடுபட்டு வந்த ராம் ஜுல்பிகர், 40, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.