தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பால் பொருள் தயாரிப்பு பயிற்சிக்கு அழைப்பு

பால் பொருள் தயாரிப்பு பயிற்சிக்கு அழைப்பு

பால் பொருள் தயாரிப்பு பயிற்சிக்கு அழைப்பு


ADDED : ஜூன் 30, 2025 03:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2025 03:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:'வேப்பேரியில் உள்ள, சென்னை கால்நடை மருத்துவக் கல்லுாரியில், மதிப்பு கூட்டப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள் தயாரித்தல் பயிற்சியில் சேரலாம்' என, அக்கல்லுாரி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இப்பயிற்சி, நாளை முதல் 4ம் தேதி வரை, வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லுாரியில் நடக்கிறது.

இதில், பால் மற்றும் பால் பொருட்களின் ஊட்டச்சத்து மதிப்பு, பால் மற்றும் பால் பொருட்களில் தரக்கட்டுப்பாட்டு சோதனைகள், பாலில் கொழுப்பு மதிப்பீடு, கொழுப்பு அல்லாத திடப்பொருட்கள், மசாலா மோர் தயாரித்தல், சுவையூட்டிய பால் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இவற்றிற்கு பயிற்சி கட்டணமாக, 1,700 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவுக்கு, 94445 09309, 98413 90169 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும். இன்றுக்குள் முன்பதிவு செய்யவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us