ADDED : அக் 18, 2024 12:10 AM
சென்னை,சென்னை ஊர்க்காவல் படை துணை மண்டல தளபதிக்கான பணியில் சேர விருப்பமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு எவ்வித ஊக்கத்தொகையும் வழங்கப்பட மாட்டாது. சிறப்பாக பணிபுரிவோருக்கு, தமிழக முதல்வர் பதக்கம் மற்றும் ஜனாதிபதி பதக்கம் ஆகியவை தகுதி அடிப்படையில் வழங்கப்படும்.
சென்னை ஊர்க்காவல் படை துணை மண்டல தளபதிக்கான பணியில் சேர விரும்புவோர், 18 - 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
குற்றப் பின்னணி இல்லாத நன்னடத்தை உடையவர்களாக இருத்தல் வேண்டும். சென்னையில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். குடும்ப அட்டை உடையவராக இருக்க வேண்டும்.
தகுதி உள்ளவர்கள், சென்னை ஊர்க்காவல் படை தலைமை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், அண்ணாசாலை என்ற முகவரியில் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் வாயிலாகவோ அனுப்பலாம். விண்ணப்பங்கள் அனுப்ப, அக், 31ம் தேதி கடைசி நாள்.
இத்தகவலை, சென்னை காவல் துறை தெரிவித்து உள்ளது.