/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாராயணீயம் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு
/
நாராயணீயம் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு
ADDED : டிச 27, 2025 05:30 AM

சென்னை: மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சியாக, 'நாராயணீயம்' சிறப்பு சொற்பொழிவு, சென்னை, அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் நடந்து வருகிறது.
'பிரவசன திலகம்' ஸ்ரீ தாமல் ராமகிருஷ்ணனும், அவரது சகோதரி பெருந்தேவியும் இணைந்து, உபன்யாசம் வழங்கி வருகின்றனர்.
இங்கு, நாராயணீய பாராயணம் தினமும் நடந்து வருகிறது. கடந்த 22ம் தேதி துவங்கிய சொற்பொழிவு நிகழ்ச்சி நாளை முடிகிறது. இதில், இலவசமாக பங்கேற்கலாம்.
நிகழ்ச்சி வளாகத்தில், ஆண்டாள் நாச்சியார் வழங்கிய, 30 திருப்பாவை பாசுரங்கள் மற்றும் ஆண்டாள் திருக்கல்யாணம், சிறப்பு பொம்மை கண்காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. கடைசி நாளில், சிறப்பு நிகழ்ச்சியாக, ருக்மணி கல்யாணம், நாராயணீய விஸ்வரூப தரிசனம் நடக்கவுள்ளது.
ஏராளமான ஆன்மிக அன்பர்கள் பங்கேற்று வருகின்றனர். நிகழ்ச்சியை, ஆன்மிக சேவையாளர் ஸ்ரீகணேஷ்ராம் குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

