/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளையாட்டு போட்டிகள் பள்ளிகளுக்கு அழைப்பு
/
விளையாட்டு போட்டிகள் பள்ளிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 04, 2025 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, விருப்பமுள்ள பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள், வரும் 9, 10ம் தேதிகளில் பையனுாரில் நடத்துகின்றன.
இதில், இருபாலருக்குமான வாலிபால், பெண்களுக்கான எறிபந்து மற்றும் ஆண்களுக்கான கால்பந்து ஆகிய போட்டிகள் மட்டும் நடக்கின்றன.
போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு, கோப்பை மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளன. போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி அணிகள், 72000 60626 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளாலம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.