/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விம்கோ நகர் 'மெட்ரோ'வில் கடைகள் அமைக்க அழைப்பு
/
விம்கோ நகர் 'மெட்ரோ'வில் கடைகள் அமைக்க அழைப்பு
ADDED : டிச 04, 2025 01:55 AM
சென்னை: விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில், வணிக நிறுவனங்கள், கடைகள் அமைக்க, மெட்ரோ ரயில் நிறுவனம் 'டெண்டர்' வெளியிட்டுள்ளது.
சென்னை, விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில், எதிர்கால தேவைகளுக்கு ஏற்ற வகையில் மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இங்கு சில்லரை விற்பனை, அலுவலக இடங்கள், பல்பொருள் அங்காடிகள், உணவு விடுதிகள், உடற்பயிற்சி மையங்கள், பயிற்சி மையங்கள், பொழுதுபோக்கு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் மற்றும் பல வணிகங்களை அமைப்பதற்கு இது மிகவும் உகந்த இடமாக இருக்கும்.
உரிமம் பெறுபவர், இந்த இடத்தை தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தலாம் அல்லது பிற வணிக நிறுவனங்களுக்கு உட்புற வாடகைக்கு விடலாம். இந்த இடம் திருவெற்றியூர், எண்ணுார், விம்கோ நகர் உள்ளிட்ட வளர்ந்து வரும் குடியிருப்பு மற்றும் தொழில்துறை பகுதிகளைச் சுற்றியுள்ளதால், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் திறன் கொண்டது.
நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் அதாவது 15 ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு அனுமதிக்கப்பட உள்ளது.
ஒரு மாதத்துக்கான அடிப்படை விலை, ஒரு சதுர மீட்டருக்கு 349 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. eprocure.gov.in என்ற இணையதளம் வழியாக வெளிப்படையான ஒப்பந்த செயல்முறை வாயிலாக இந்த இடம் வழங்கப்படும்.
ஒப்பந்த படிவங்களை டிச., 18க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு marketing@cmrl.in என்ற இ - மெயிலில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

