/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் கிடந்த 'ஐ - போன்' உரியவரிடம் ஒப்படைப்பு
/
சாலையில் கிடந்த 'ஐ - போன்' உரியவரிடம் ஒப்படைப்பு
சாலையில் கிடந்த 'ஐ - போன்' உரியவரிடம் ஒப்படைப்பு
சாலையில் கிடந்த 'ஐ - போன்' உரியவரிடம் ஒப்படைப்பு
ADDED : மார் 02, 2026 05:39 AM

கோட்டூர்புரம்: நள்ளிரவில் சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, கீழே கிடந்த 1.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐ - போனை கண்டெடுத்த பெண் துாய்மை பணியாளர், அதை உரியவரிடம் ஒப்படைத்தார்.
ராயபுரத்தைச் சேர்ந்தவர் வேதம்மாள், 45. அடையாறு மண்டலம், 170வது வார்டு, கோட்டூர்புரத்தில் துாய்மை பணி செய்கிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, 1.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு ஐ - போன் சாலையில் கிடந்தது. அதை எடுத்து, மேல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
இரண்டு மணி நேரத்தில், கோட்டூர்புரம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சுனில் என்பவர், பெசன்ட் நகர் சென்று வீடு திரும்பும்போது தொலைத்த ஐ - போனை, பைக்கில் சென்ற பாதையில் தேடிக் கொண்டிருந்தார்.
கோட்டூர்புரத்தில் தேடிக்கொண்டிருந்தபோது, அவரை கண்ட வேதம்மாள், மொபைல் போன் தங்கள் வசம் இருப்பதாக கூறினார். பின், அடையாளங்களை உறுதி செய்த பின், போன் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

