/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.பி.எல்., கிரிக்கெட் மெட்ரோ சேவை நீட்டிப்பு
/
ஐ.பி.எல்., கிரிக்கெட் மெட்ரோ சேவை நீட்டிப்பு
ADDED : மார் 16, 2025 12:11 AM
சென்னை, சென்னையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நாட்களில், நள்ளிரவு 1:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், நேற்று வெளியிட்ட அறிக்கை:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்க உள்ள ஐ.பி.எல்., போட்டிகளை காண செல்லும் ரசிகர்களுக்கு, மெட்ரோ பயணத்தை வழங்க, சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
சென்னையில் சி.எஸ்.கே., அணி விளையாடும் போட்டி நடக்கும் அனைத்து நாட்களிலும், மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்படும்.
ஸ்பான்சர் செய்யப்பட்ட ஐ.பி.எல்., போட்டிகான டிக்கெட் வைத்திருப்போர், எந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும், போட்டி நடக்கும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் நிலையம் வரை இலவசமாக பயணிக்கலாம்.
பயணியரின் தேவையைப் பொறுத்து, போட்டி முடிந்த பின், மெட்ரோ ரயில் சேவை, 90 நிமிடங்கள் வரை அல்லது அதிகபட்சமாக நள்ளிரவு 1:00 மணி வரை நீட்டிக்கப்படும்.
ஒவ்வொரு போட்டி நாளுக்கு முன்பும், கடைசி மெட்ரோ ரயில் புறப்படும் நேரம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வாயிலாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.