ADDED : பிப் 22, 2026 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் மருபெட்டா ரமேஷ், 65. இவருக்கு, 'இரிடியம்' உலோக கலசம் வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என, விட்டல் பாபு என்பவர், ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய மருபெட்டா ரமேஷ், பெரியமேடு பகுதியில் வைத்து பல தவணைகளாக 15 லட்சம் ரூபாயை கொடுத்தார். இரிடியம் கலசத்தை தராமலும், வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்துள்ளார்.
இதுகுறித்த மருபெட்டா ரமேஷ் புகாரையடுத்து பெரியமேடு போலீசார், தலைமறைவான விட்டல் பாபுவை தனிப்படை அமைத்து தேடினர்.
இந்நிலையில் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த விட்டல்பாபுவை, போலீசார் நேற்று கைது செய்தனர். சதுரங்க வேட்டை பட பாணியில் நடந்த இந்த மோசடி குறித்து, போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.

