/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பா.ஜ., பிரமுகர் எனக்கூறி பித்தலாட்டம்?
/
பா.ஜ., பிரமுகர் எனக்கூறி பித்தலாட்டம்?
ADDED : மார் 27, 2025 12:14 AM
புளியந்தோப்பு கொடுங்கையூர் விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞரான இவர், பா.ஜ., கட்சியில் வடசென்னை மேற்கு மாவட்ட தலைவராக உள்ளார். இவர், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
புளியந்தோப்பு, ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த அப்துல்முஜீப், 45, என்பவர் பா.ஜ.,வில் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவராக உள்ளதாக கூறி, கட்சித் தலைவர் அண்ணாமலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக, கட்சியின் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி வருகிறார். அவர் பா.ஜ.,வில் எந்த பொறுப்பிலும் இல்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.
போலீசார் நடத்தி முதற்கட்ட விசாரணையில், அப்துல் முஜீப் மீது 'குண்டாஸ்' உட்பட, ஐந்து வழக்குகள் உள்ளன. பாலாஜியின் புகார் குறித்து விசாரித்து வருகின்றனர்.