ADDED : ஜன 19, 2026 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த காக்கநல்லுார் கிராமத்தில், குடியிருப்புகளுக்கு அருகில் காலிமனைகள் உள்ளன.
இதில், வேல மரம், சீமை கருவேல மரம் உள்ளிட்டவை வளர்ந்துள்ளன. சில தினங்களாக இப்பகுதியில் சிறுத்தை உலாவுவதாக தகவல் பரவி வருகிறது.
இதையடுத்து, உத்திரமேரூர் ஒன்றிய வனச்சரகர் ராமதாஸ் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி ஆய்வு செய்து வருகின்றனர்.

