/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏரி நீர்வரத்து பாதையை கண்டுகொள்ளாமல் அலட்சியம் ரூ.25 கோடியில் நடக்கும் பணி வேலைக்காகுமா?
/
ஏரி நீர்வரத்து பாதையை கண்டுகொள்ளாமல் அலட்சியம் ரூ.25 கோடியில் நடக்கும் பணி வேலைக்காகுமா?
ஏரி நீர்வரத்து பாதையை கண்டுகொள்ளாமல் அலட்சியம் ரூ.25 கோடியில் நடக்கும் பணி வேலைக்காகுமா?
ஏரி நீர்வரத்து பாதையை கண்டுகொள்ளாமல் அலட்சியம் ரூ.25 கோடியில் நடக்கும் பணி வேலைக்காகுமா?
ADDED : பிப் 23, 2024 12:45 AM

சிட்லப்பாக்கம், தாம்பரம் மாநகராட்சி சிட்லப்பாக்கத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, 102 ஏக்கர் பரப்பளவு ஏரி உள்ளது.
சுற்றுச்சூழல் துறை நிதி 25 கோடி ரூபாயில், 2019ல், ஏரியில் சீரமைப்பு பணி துவங்கியது. சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகளும் இடிக்கப்பட்டன. ஏரியில் இருந்த கழிவுகள் வெளியேற்றப்பட்டு, துார்வாரி, ஆழப்படுத்தும் பணி நடந்தது.
கரை, கான்கிரீட் கற்களால் பலப்படுத்தப்பட்டு, ஒரு பகுதியில் நடைபாதை அமைக்கப்பட்டது. 50 சதவீத பணிகள் முடிந்த நிலையில், எஞ்சிய பணிகள் ஒன்றரை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், கிடப்பில் போடப்பட்டிருந்த பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஏரிக்கரையில் மூலிகை உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான செடிகள் நடப்பட்டுள்ளன.
சிட்லப்பாக்கம் அனைத்து நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் பி.விஸ்வநாதன், 66, கூறியதாவது:
ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம், சிறுவர் விளையாட்டு பூங்கா, மின்விளக்கு, 'வியூ' பாயின்ட், குடிநீர் சுத்திகரிப்பு மையம், ஆழ்துளை கிணறு, மோட்டார் அறை உள்ளிட்டவை செய்ய வேண்டியுள்ளது.
மேற்கு பகுதியில் உள்ள பச்சை மலையில் இருந்து வரும் மழைநீரே, இந்த ஏரியின் ஆதாரம். அந்த பாதையை இதுவரை இணைக்காமல் உள்ளனர். அதை இணைத்தால் மட்டுமே, மழைக்காலத்தில் ஏரிக்கு தண்ணீர் வரும். இல்லையெனில், சீரமைத்தும் பயனில்லாமல் போய்விடும்.
மேற்கு பகுதியில், மழைநீர் கால்வாய் கட்ட, 2.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால், அதற்கான எந்த பணியும் துவங்கப்படவில்லை. மேற்கு பகுதி வழியாக கழிவுநீர் கால்வாய் ஒன்று செல்கிறது.
அந்த இடத்தில் சுத்திகரிப்பு மையம் கட்டி, சுத்திகரிப்பு செய்தால் மட்டுமே, ஏரியில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க முடியும்.
அதனால், எஞ்சியுள்ள பணிகளை தாமதமின்றி துவக்கி, விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.