/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வருகை பதிவில் தில்லுமுல்லு அம்பத்துார் மண்டலத்தில் மாதம் ரூ.1 கோடி ஊழல்? விசாரணை நடத்தப்படும் கமிஷனர் உறுதி

ADDED : நவ 25, 2025 05:03 AM
சென்னை: அம்பத்துார் மண்டலத்தில் பணியில் இல்லாத துாய்மை பணியாளர்களை கணக்கு காட்டி, 1 கோடி ரூபாய் ஊழல் நடப்பதாக தமிழக பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., மாநில செயலர் கராத்தே தியாகராஜன், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரனிடம் அளித்த புகார்:
அம்பத்துார் மண்டலத்தில், 1,400 துாய்மை பணியாளர்கள் பணியில் இருப்பதாக கணக்கு காட்டுகின்றனர். ஆனால், 1,000 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
மற்ற 400 பேர் எங்கு பணியாற்றுகின்றனர் என தெரியவில்லை. 400 பேரின் பெயரை பயன்படுத்தி மாதந்தோறும், மாநகராட்சியில் ஒரு கோடி ரூபாய் ஊழல் நடந்து வருகிறது. 400 பேரின் சம்பளம் யாரிடம் போகிறது என தெரியவில்லை. இதுகுறித்து, மாநகராட்சி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் கூறுகையில், ''அம்பத்துார் மண்டலத்தில் பணிக்கு வராமலே, 400 துாய்மை பணியாளர்கள் ஊதியம் பெறுவதாக புகார் வந்துள்ளது. புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
''துாய்மைப்பணியாளர்கள் பெயரில் ஊதியம் பெற்றதில் முறைகேடு நடைபெற்றிருந்தால், சம்பந்தப்பட்டோர் மற்றும் அதிகாரிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.