/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குட்டீசுக்கு சளி தொல்லையா? தேன் கொடுத்தால் குறையும்!
/
குட்டீசுக்கு சளி தொல்லையா? தேன் கொடுத்தால் குறையும்!
குட்டீசுக்கு சளி தொல்லையா? தேன் கொடுத்தால் குறையும்!
குட்டீசுக்கு சளி தொல்லையா? தேன் கொடுத்தால் குறையும்!
ADDED : அக் 18, 2024 12:11 AM
சென்னை, ''குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதால், மழைக்காலங்களில் ஏற்படும் சளி தொந்தரவை குறைக்கலாம்,'' என எஸ்.ஆர்.எம்., குளோபல் மருத்துவமனை டாக்டர் நந்தகுமார் கூறினார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
மழைக் காலங்களில், சளி, இருமல், காய்ச்சல், உடல்வலி போன்ற பாதிப்புகள், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அதிகரித்து வருகிறது. சில நடவடிக்கைகள் வாயிலாக, நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
குறிப்பாக, குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்துவது அவசியம்.
குழந்தைகளின் மூக்கில் இருந்து நீர் வடிவது, காய்ச்சல், இருமல் போன்ற பாதிப்புகள் அவர்களை எளிதாக தாக்கும். ஓரிரு நாட்களில் குணமடையாவிட்டால், டாக்டரை பார்ப்பது அவசியம்.
குழந்தைகள் நீர்ச்சத்தோடு இருப்பதை, பெற்றோர் உறுதி செய்வது அவசியம். தேன் கொடுப்பதால், குழந்தைகளுக்கு சளி தொந்தரவு குறையலாம். அதிக சளி, மூச்சுத்திணறல் இருந்தால், 'நெபுலைசர்' வைத்துக் கொள்வது அவசியம்.
மேலும், குழந்தைகளுக்கு தேவையான மருந்துகள் வைத்திருப்பதுடன், ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தையாக இருந்தால், 'நாசில் டிராப்ஸ்' பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு டாக்டர் நந்தகுமார் கூறினார்.