ADDED : ஏப் 22, 2026 10:13 PM
அ நிறம் | அளவு
சென்னை: 'இஸ்கான்' கோவில் ஆண்டு விழா, வரும் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
சென்னை, கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் அமைந்துள்ளது, 'இஸ்கான்' எனும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்க கோவில். இக்கோவிலின் 14ம் ஆண்டு விழா வரும், 26ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
அன்று மாலை 6:00 மணி முதல் துளசி, கவுர ஆர்த்தி நடக்கிறது. தொடர்ந்து ராதா கிருஷ்ணர், நிதாய் கவுரங்கர் மூலவர்களுக்கு மலர் அபிஷேக வழிபாடு நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
