/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'இஸ்கான்' ரத யாத்திரை திருவான்மியூரில் விமரிசை
/
'இஸ்கான்' ரத யாத்திரை திருவான்மியூரில் விமரிசை
ADDED : பிப் 15, 2026 06:11 AM

சென்னை: திருவான்மியூரில் உள்ள 'பிரபுபாதரின் இஸ்கான்' சார்பில், 15ம் ஆண்டு ரத யாத்திரை, நேற்று விமரிசையாக நடத்தப் பட்டது.
ரத யாத்திரையை, உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர், டீகா ராமன் துவக்கி வைத்தார். அகில உலக ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் தலைவர் மது பண்டிட் தாசா தலைமை தாங்கினார். பிரதிவாதி பயங்கரம் சம்பத்சுவாமிகள், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கிருஷ்ணர், ருக்மணி, சத்யபாமா கவுர நிதாய் மற்றும் பிரபுபாதர் ஆகியோர் எழுந்தருளிய ரதம், அடையாறு, கஸ்துாரிபாய் நகரில் துவங்கி, இந்திரா நகர், திருவான்மியூர் வீதிகள் வழியாக சென்று, திருவான்மியூர், வால்மீகி நகரில் உள்ள தட்சிண துவாரகா தாம் பிரபுபாதரின் இஸ்கான் கோவிலை அடைந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.
ரத யாத்திரையின்போது, கோலாட்டம், ஒயிலாட்டம், கரகம், மயிலாட்டம், தப்பாட்டம், தேவராட்டம் என, பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

