தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'இஸ்கான்' சார்பில் கோடை பயிற்சி முகாம்

 'இஸ்கான்' சார்பில் கோடை பயிற்சி முகாம்

 'இஸ்கான்' சார்பில் கோடை பயிற்சி முகாம்


ADDED : ஏப் 10, 2026 08:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 08:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'இஸ்கான்' சார்பில், சிறார்களுக்கான கோடை கால இலவச பயிற்சி முகாம், 'ஆன்லைன்' மற்றும் நேரடி வகுப்பாக துவங்கவுள்ளது. விருப்பமுள்ளோர், முன்பதிவு செய்யலாம்.

இஸ்கான் எனும் சர்வதேச கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் பல்சுவை முகாம் இலவசமாக நடத்தப்படும். இந்த ஆண்டிற்கான முகாம், 'ஆன்லைன்' மற்றும் நேரடி வகுப்பாக, ஏப்ரல் - மே மாதங்களில், தலா 10 நாட்கள் நடத்தப்பட உள்ளது.

இதில், 6 - 12, 13 - 17 வயது, என இரண்டு பிரிவாக முகாம் நடத்தப்படுகிறது. தமிழ், ஆங்கில மொழிகளில் சிறார்களுக்கு கதைகள், பாட்டுகள், பஜனைகள், நெருப்பில்லாத சமையல், கலை, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு குறித்து போதிக்கப்படுகிறது.

அதேபோல், 13 - 17 வயதிற்கு உட்பட்டோருக்கு கருத்துக்களை வலியுறுத்தும் கதைகள், விவாதம், ஆன்மிக அமர்வுகள், விளையாட்டுக்கள் கற்று தரப்படுகின்றன. பங்கேற்பு சான்றிதழும் உண்டு.

'வாட்ஸாப்' மற்றும் 'இ - மெயில்' வாயிலாக, பாடங்கள், கதைகள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட உள்ளது.

விருப்பமுள்ளோர், www.bps.fun/summer-camp/ எனும் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்துக் கொள்ளலாம். விபரங்களுக்கு, 80725 99295 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, இஸ்கான் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us