/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
விடுதியில் அழுகிய நிலையில் ஐ.டி., ஊழியரின் சடலம் மீட்பு
/
விடுதியில் அழுகிய நிலையில் ஐ.டி., ஊழியரின் சடலம் மீட்பு
விடுதியில் அழுகிய நிலையில் ஐ.டி., ஊழியரின் சடலம் மீட்பு
விடுதியில் அழுகிய நிலையில் ஐ.டி., ஊழியரின் சடலம் மீட்பு
PUBLISHED ON : செப் 26, 2025 12:00 AM
சென்னை, திருவல்லிக்கேணியில், தங்கும் விடுதியில் அழுகிய நிலையில் கிடந்த, ஐ.டி., ஊழியரின் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரிக்கின்றனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் திபங்கர் தாஸ், 46. இவர், திருவல்லிக்கேணியில் உள்ள 'சாம் இன்' தங்கும் விடுதியில், அறை எண் 209ல் தங்கி, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று காலை, அவரது அறையிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திபங்கர் தாஸ் தங்கிய அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு, அவர் இறந்து கிடந்தார்.
உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
திபங்கர் தாஸ் இறந்து இரண்டு நாட்கள் இருக்கும் என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பே, இறப்பிற்கான காரணம் தெரியும் என்றும், போலீசார் தெரிவித்தனர்.