ADDED : பிப் 08, 2026 05:51 AM

சோழிங்கநல்லுார்: ஓ.எம்.ஆரில், ஐ.டி., ஊழியர்கள் சென்ற வாகனம் உட்பட, மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில், நல்வாய்ப்பாக ஐ.டி., ஊழியர்கள் பாதிப்பின்றி உயிர் தப்பினர்.
சோழிங்கநல்லுாரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தின் டெம்போ டிராவலர் வாகனம், ஊழியர்களை ஏற்றிக்கொண்டு, நேற்று அதிகாலை, நாவலுார் நோக்கி புறப்பட்டது. ஆவின் அருகே சென்றபோது, முன்னால் சென்ற ஒரு லாரி, அணுகு சாலைக்கு திரும்ப பிரேக் பிடித்தது.
அப்போது, பின்னால் வந்த கார், அதன்பின் வந்த டெம்போ டிராவலர், அதை தொடர்ந்து வந்த மற்றொரு லாரி ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதின.
இதில், மூன்று வாகனங்களும் சேதமடைந்தன. ஓட்டுநர்கள் மற்றும் ஐ.டி., ஊழியர்கள் காயமின்றி தப்பினர். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், ஓட்டுநர்களான மூர்த்தி, 47, சரவணன், 40, அரவிந்தன், 30, ஆகியோரிடம் விசாரிக்கின்றனர்.
