/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்வாய்க்கு தடுப்பு சுவர் ரூ.22 கோடியில் கட்ட முடிவு
/
கால்வாய்க்கு தடுப்பு சுவர் ரூ.22 கோடியில் கட்ட முடிவு
கால்வாய்க்கு தடுப்பு சுவர் ரூ.22 கோடியில் கட்ட முடிவு
கால்வாய்க்கு தடுப்பு சுவர் ரூ.22 கோடியில் கட்ட முடிவு
ADDED : ஜன 22, 2025 12:53 AM
கோடம்பாக்கம் கோடம்பாக்கம் மண்டலத்தில், 127 -முதல் 142 வரை, 16 வார்டுகள் உள்ளன. இம்மண்டலத்தின் எல்லையில் கூவம் ஆறும், அடையாறு ஆறும் செல்கிறது.
மேலும், மாம்பலம், ஜாபர்கான்பேட்டை, எம்.ஜி.ஆர்., நகர், விருகம்பாக்கம், காவாங்கரை என ஐந்து கிளை கால்வாய்கள் செல்கின்றன.
மண்டலத்தில் இருந்து வெளியேறும் மழைநீர், இந்த கால்வாய்கள் வழியாக அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் கலக்கிறது.
இதில், ஜாபர்கான்பேட்டை மற்றும் எம்.ஜி.ஆர்., கால்வாயில் சில இடங்களில், தடுப்புச் சுவர் இன்றி உள்ளது.
மேலும், தடுப்பு சுவர்கள் போதிய உயரத்தில் இல்லாததால், அப்பகுதிவாசிகள் குப்பை வீசி வருகின்றனர்.
இதை தடுக்கும் விதமாக, 1.7 கி.மீ., துாரம் எம்.ஜி.ஆர்., கால்வாயில் 16 கோடி ரூபாய்க்கும், ஜாபர்கான்பேட்டை கால்வாயில், 6 கோடி ரூபாய் மதிப்பில், 600 மீட்டர் துாரத்திற்கு 6 அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் மற்றும் இரும்பு கம்பி வேலி அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.