/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1.35 கோடியில் வடிகால் கட்ட முடிவு
/
ரூ.1.35 கோடியில் வடிகால் கட்ட முடிவு
ADDED : செப் 19, 2024 12:46 AM
அடையாறு, அடையாறு மண்டலம், 171வது வார்டு, கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் உள்ளன.
இந்த சாலையில் உள்ள மழைநீர் வடிகால் மிகவும் சேதமடைந்துள்ளது. அதை இடித்து, அடையாறு ஆற்றில் சேரும் வகையில், புதிய வடிகால் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது.
இதற்காக, 1.35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அருகில் உள்ள காமராஜர் சாலையில் உள்ள வடிகாலும் மிகவும் சேதமடைந்தது. இதையும் இடித்து, புதிய வடிகால் கட்ட 1.22 கோடி ரூபாயில் வடிகால் கட்டப்பட உள்ளது.பருவமழைக்கு முன், வடிகால்களை கட்டி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதேபோல் அடையாறு மண்டலம், 169வது வார்டு, சைதாப்பேட்டை, வெங்கடாபுரத்தில் மாநகராட்சி துவக்கப்பள்ளி உள்ளது.
இங்குள்ள சமையல் கூடம் மற்றும் உணவருந்தும் கூடம், மிகவும் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது.
இதை இடித்து புதிய கூடங்கள் கட்ட, 13 லட்சம் ரூபாய் மாநகராட்சி ஒதுக்கி உள்ளது.