/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' துாங்காமல், அதிக பணம் செலவிடும் சிறார்களை கவனிப்பது அவசியம் '
/
' துாங்காமல், அதிக பணம் செலவிடும் சிறார்களை கவனிப்பது அவசியம் '
' துாங்காமல், அதிக பணம் செலவிடும் சிறார்களை கவனிப்பது அவசியம் '
' துாங்காமல், அதிக பணம் செலவிடும் சிறார்களை கவனிப்பது அவசியம் '
ADDED : அக் 27, 2024 12:17 AM

சென்னை, சென்னை, ஆர்.ஏ.புரத்தில், அதுல்யா சீனியர் கேர், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை, ரோட்டரி மாவட்டம் ---3234 ஆகியவை இணைந்து, முதியோர்களுக்கு பக்கவாத பாதிப்பு தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தின. மருத்துவ மக்கள் மன்றம் என்ற திட்டத்தையும் துவக்கினர்.
நிகழ்வில், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் அபுல் ஹாசன் கூறியதாவது,
இந்திய மருத்துவ சங்கத்தில், தமிழகத்தில் மட்டும், 177 கிளைகள் உள்ளன. ஒவ்வொரு கிளையிலும், மருத்துவ மக்கள் மன்றம் வாயிலாக, நோய் பாதிப்புகள், உணவு பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக, இளைஞர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. எனவே, இளைஞர்களிடையே அதிகரித்துள்ள சினிமா மோகத்தை குறைத்து, அவர்களை உடற்பயிற்சி, விளையாடுதல் போன்றவைகளில் கவனம் செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
தங்கள் குழந்தைகள் துாக்கமின்மையால் அவதிப்பட்டாலும், அதிக பணத்தை செலவழித்தாலும், போதை பழக்கத்திற்கு உள்ளானதற்கான அறிகுறிகளாக இருக்கும். எனவே, அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி, போதை பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதுல்யா சீனியர் கேர் நிறுவனர் சீனிவாசன் கூறுகையில், ''பக்கவாதம் குறித்த அடிப்படை விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்த்து, தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளோம். பாதிப்பு ஏற்பட்ட ஆறு மணி நேரத்திற்குள் உரிய மருத்துவ சிகிச்சை பெறும்பட்சத்தில், பக்கவாதத்தில் ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்கலாம். இதுகுறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்,'' என்றார்.
நிகழ்ச்சியில், கிரீஷ்வரி மருத்துவமனை தலைவர் டாக்டர் சரணவன், குழந்தைகள் நல டாக்டர் காசி, டாக்டர் சுமித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.