தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/தி.மு.க., நிர்வாகி கொலை வழக்கில் ஐவர் சரண்

தி.மு.க., நிர்வாகி கொலை வழக்கில் ஐவர் சரண்

தி.மு.க., நிர்வாகி கொலை வழக்கில் ஐவர் சரண்


ADDED : மார் 02, 2024 12:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2024 12:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்துார் ஒன்றியக்குழு தலைவராகவும், காட்டாங்கொளத்துார் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலராகவும் இருந்த ஆராவமுதன், 52, நேற்று முன்தினம், நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, நேற்று முன்தினம் இரவு, கட்சியினர் திரண்டதால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

அதனால், தாம்பரம், மண்ணிவாக்கம், ஓட்டேரி, கேளம்பாக்கம், கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து, ஆராவமுதனின் உடல் நேற்று காலை, வண்டலுார் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு, போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.

இதில், தி.மு.க., நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர் அன்பரசன் தலைமையில் பங்கேற்று, இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், கொலை செய்து தப்பியவர்கள், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் நேற்று காலை சரணடைந்தனர்.

இது குறித்து, ஓட்டேரி போலீசார் கூறியதாவது:

வண்டலுார் தி.மு.க., நிர்வாகி கொலை வழக்கில், ஓட்டேரி விரிவு, டி.எஸ்., நகரை சேர்ந்த முனீஸ்வரன், 22, மண்ணிவாக்கம் சத்தியசீலன், 20, திருப்பூர் மாவட்டம், ராக்கியபாளையம் சம்பத்குமார், 20, மணிகண்டன், 21, திண்டுக்கல் மாவட்டம், சித்தரேவு பகுதி 17 வயது சிறுவன் ஆகியோர், சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

அவர்கள், தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை முறைப்படி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க இருக்கிறோம். விசாரணைக்கு பின், கொலைக்கான காரணம் தெரிய வரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us