/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சோழிங்கநல்லுாரில் ஜமாபந்தி எம்.பி., - எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
சோழிங்கநல்லுாரில் ஜமாபந்தி எம்.பி., - எம்.எல்.ஏ., பங்கேற்பு
சோழிங்கநல்லுாரில் ஜமாபந்தி எம்.பி., - எம்.எல்.ஏ., பங்கேற்பு
சோழிங்கநல்லுாரில் ஜமாபந்தி எம்.பி., - எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : ஜூன் 18, 2025 12:22 AM

சோழிங்கநல்லூர், சென்னை மாவட்டத்தில், அதிக பரப்பு கொண்ட சோழிங்கநல்லுார் தாலுகாவில், இரண்டு நாள் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று துவங்கியது. வருவாய் கோட்டாட்சியர் ரெங்கராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில், தென்சென்னை தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், மண்டல குழு தலைவர் மதியழகன், கவுன்சிலர் ஏகாம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேற்று, சோழிங்கநல்லுார் குறுவட்டத்துக்கு உட்பட்ட மக்கள், பட்டா பெயர் மாற்றம், வாரிசு, இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்கள் கேட்டு மனு அளித்தனர்.
இந்த மனுக்கள் தொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர், மாலைக்குள் விசாரித்து அறிக்கை தர கோட்டாட்சியர் கேட்டுக்கொண்டார்.
மேலும், சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பட்டா, சாலை ஆக்கிரமிப்பு உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பிரச்னை தொடர்பாகவும், கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ., கோட்டாட்சியரிடம் விளக்கம் கேட்டனர். இதற்கு, மாவட்ட ஆட்சியரிடம் பேசி விரைவில் தீர்வு காண்பதாக, கோட்டாட்சியர் பதிலளித்தார்.
பள்ளிக்கரணை குறு வட்டத்துக்கு உட்பட்ட மடிப்பாக்கம், பெருங்குடி, உள்ளகரம், பள்ளிக்கரணை, ஒக்கியம்துரைப்பாக்கம், காரப்பாக்கம், சீவரம், ஜல்லடியன்பேட்டை ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த மக்கள், இன்று மனு அளித்து தீர்வு காணலாம் என, வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினர்.