ADDED : டிச 22, 2024 09:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக, நேரடி முகவர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல், ஜன.,4ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில், காலை 10:30 மணிக்கு நேர்காணல் நடக்கும். முகவர்களாக குறைந்தது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது குறைந்தபட்சம் 18ஆக இருக்க வேண்டும்.
இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில், முகவர்களாக இருப்போர், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.
விருப்பம் உள்ளவர்கள், மூன்று புகைப்படம், அசல் மற்றும் இரண்டு நகல் வயதுச்சான்று, முகவரி சான்று கல்வி சான்று ஆகியவற்றுடன், நேர்காணலில் பங்கேற்கலாம். தேர்வு செய்யப்படுவோர் விற்பனை செய்யும் ஆயுள் காப்பீடு பாலிசியின் பிரீமியம் அடிப்படையில், ஊக்கத்தொகை வழங்கப்படும்.

