ADDED : மார் 08, 2026 05:31 AM
அ நிறம் | அளவு
சென்னை: 'சென்னையில் ஜீவா இல்லம், மாமல்லபுரத்தில் நேரு ஓய்வு இல்லம் புதுப்பிக்கப்படும்' என, சட்டசபையில், தொழிலாளர் நலத்துறை மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் தங்குவதற்காக, 1.38 கோடி ரூபாயில், 'ஜீவா இல்லம்' புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அதே போல், அமைப்புசார் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் தங்க வசதியாக மாமல்லபுரத்தில், 3.1 கோடி ரூபாயில், 'நேரு இல்லம்' சீரமைக்கப்பட்டு உள்ளது.
இந்த இரு கட்டடங்களையும், அமைச்சர் கணேசன் நேற்று திறந்து வைத்தார்.
