ADDED : ஜன 13, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கானாத்துார், ஜ
சென்னை, கானத்தூர், ரெட்டி குப்பம் முகமது கவுஸ் தெருவை சேர்ந்தவர் பாத்திமாபீவி, 80. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம், 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தண்ணீர் வாங்கி குடித்தார். திடீரென கையில் இருந்த ஸ்பிரேவை எடுத்து, மூதாட்டியின் முகத்தில் அடித்தார். கண் எரிச்சலில் தவித்த மூதாட்டியிடம், 4 சவரன் செயினை பறித்து தப்பினார்.
கூச்சலிட்ட மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். கானத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.***