தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/நகை ம திப்பீட்டாளர் பயிற்சி

நகை ம திப்பீட்டாளர் பயிற்சி

நகை ம திப்பீட்டாளர் பயிற்சி


ADDED : மார் 01, 2024 12:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2024 12:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சென்னையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடக்க உள்ளது.

சென்னையில் வரும் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை, தினமும் காலை 9:30 மணி முதல் பகல் 2:00 மணி வரை பயிற்சி வகுப்பு நடக்கும்.

தங்கம், செம்பு, வெள்ளி, பிளாட்டினம் ஆகிய உலோகங்களின் தரம் அறிதல், உரைகல் பயன்படுத்தும் முறை, கேரட் அண்ட் கேரட் தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

ஆசிட் பயன்படுத்துதல், எடை அளவு இணைப்பான், ஆபரண வகைகள், போலி நகைகளை அடையாளம் காணுதல் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.

பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில், நகை மதிப்பீட்டாளர் பணி குறித்தும், அவைகளை பெறும் முறைகள் குறித்தும், ஆலோசனை வழங்கப்படும்.

இப்பயிற்சி குறித்த கூடுதல் விபரங்களுக்கு, www.editn.in இணையதளத்தை பார்வையிடவும். அலுவலக நேரங்களில், 86681 02600, 86681 00181, 70101 43022, 98413 36033 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும். முன்பதிவு அவசியம். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us