/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2 கிலோ தங்க நகைகளுடன் நகைக்கடை ஊழியர் ஓட்டம்
/
2 கிலோ தங்க நகைகளுடன் நகைக்கடை ஊழியர் ஓட்டம்
ADDED : ஏப் 26, 2025 12:29 AM
யானைகவுனி, சூளையைச் சேர்ந்தவர் பக்சிங், 40. இவர் பாரிமுனை, என்.எஸ்.சி.போஸ் சாலையில் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், உறவினரான சந்தீப் சிங் தங்கி, வேலை செய்து வருகிறார். ஒரு வாரத்திற்கு முன், பக்சிங் வியாபாரத்திற்காக ராஜஸ்தான் சென்ற நிலையில், சந்தீப் சிங் கடையை கவனித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 22ம் தேதியில் இருந்து கடை பூட்டி கிடப்பதாக, அக்கம்பக்கத்தினர் பக்சிங்கிற்கு தகவல் தெரிவித்தனர். ராஜஸ்தானில் இருந்து நேற்று சென்னை திரும்பிய அவர், கடைக்கு சென்று பார்த்தபோது நகைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து யானைகவுனி போலீசார் வழக்கு பதிந்து, ஆய்வு செய்ததில் 2 கிலோ தங்க நகைகளுடன் சந்தீப் சிங் மாயமானது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.