/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பிரேஸ்லெட்' திருடிய ஜுவல்லரி ஊழியர் கைது
/
'பிரேஸ்லெட்' திருடிய ஜுவல்லரி ஊழியர் கைது
ADDED : ஏப் 11, 2025 11:45 PM
பாண்டி பஜார் தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட 'தங்கமயில்' நகைக்கடையின் விற்பனை பிரிவில், மேலாளராக பணிபுரிபவர் குருபாலன், 34. இவர், கடந்த 6ம் தேதி 'பிரேஸ்லெட்' பிரிவில் உள்ள நகைகளை சரிபார்த்தார்.
அங்கிருந்த பிரேஸ்லெட்களில் ஒன்று, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்தது தெரியவந்தது. சோதனை செய்தபோது, அது போலி நகை என தெரியவந்தது.
விசாரணையில், 3 சவரன் பிரேஸ்லெட் திருடப்பட்டு, அதற்கு மாற்றாக போலி நகை வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து, பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், அதே கடையில் பணி புரியும், காஞ்சிபுரம், ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஆனந்தன், 33, என்பவர் போலி நகை வைத்து, 'பிரேஸ்லெட்'டை திருடியது தெரியவந்தது.
இவர், எம்.காம்., முடித்து விட்டு, ஒரு வாரத்திற்கு முன் தான், நகைக்கடையில் பணிக்கு சேர்ந்துள்ளார். விற்பனை பிரிவில் பயிற்சியில் இருந்தபோது, கடந்த 5ம் தேதி நகையை திருடியது தெரியவந்தது.
ஆனந்தனை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், நகையை பறிமுதல் செய்தனர்.