/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலி போலீஸ் 'ஐ.டி., கார்டால்' சிக்கிய நகைக்கடை உரிமையாளர்
/
போலி போலீஸ் 'ஐ.டி., கார்டால்' சிக்கிய நகைக்கடை உரிமையாளர்
போலி போலீஸ் 'ஐ.டி., கார்டால்' சிக்கிய நகைக்கடை உரிமையாளர்
போலி போலீஸ் 'ஐ.டி., கார்டால்' சிக்கிய நகைக்கடை உரிமையாளர்
ADDED : ஆக 08, 2025 12:45 AM

வண்ணாரப்பேட்டை, ஆக. 8-
போலி போலீஸ் அடையாள அட்டை பயன்படுத்திய, நகைக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
வண்ணாரப்பேட்டை, கண்ணன் ரவுண்டானா பகுதியில் வண்ணாரப்பேட்டை போலீசார், நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரை மறித்து, அதில் வந்த இருவரிடமும் விசாரித்தனர். அவர்கள் முரண்பாடாக பதிலளிக்கவே, ஸ்கூட்டரின் பெட்டியை திறந்து சோதனையிட்டனர்.
அதில், வினோத் சோப்டா, 48, என்பவர் பெயரில், காவல் துறையில் உதவியாளர் பணி செய்வதற்கான அடையாள அட்டை ஒன்று இருந்தது.
விசாரணையில், வினோத் சோப்டா, டி.எச்., சாலையில், நகைக்கடை வைத்துள்ளார். கைப்பற்றப்பட்ட அடையாள அட்டை போலியானது என்பதும், ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர்கள், அவரது நகைக்கடையில் பணி புரிபவர்கள் என்பது தெரிவந்தது.
போலீசார், பழைய வண்ணாரப்பேட்டை, முத்தையா முதலி தெருவைச் சேர்ந்த வினோத் சோப்டா, 48, என்பவரை, நேற்று கைது செய்தனர். விசாரணைக்கு பின், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.