ADDED : டிச 16, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணகி நகர், பெருங்குடியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 47. எலக்ட்ரீஷியன். நேற்று முன்தினம் நள்ளிரவு, துரைப்பாக்கம், எழில் நகரில் உள்ள ஒரு பெண் வீட்டுக்கு போதையில் சென்றார். அதிகாலை வெளியே வரும் போது, வீட்டின் அருகில், ஒரு ஆசாமி நின்று கொண்டிருந்தார்.
வெங்கடேஷிடம், தன்னை போலீஸ் என, அறிமுகம் செய்து கொண்ட நபர், 'நீ எங்கிருந்து வருகிறாய்; எதற்கு இங்கு வந்தாய்' என கேட்டுள்ளார். உறவினர் வீடு என, வெங்கடேஷ் கூறியுள்ளார்.
பின், வெங்கடேஷ் அணிந்திருந்த இரண்டரை சவரன் தங்க செயினை வாங்கிக்கொண்டு, 'கண்ணகி நகர் போலீஸ் ஸ்டேஷனில் வந்து வாங்கி கொள்' என, கூறி சென்று உள்ளார்.
அங்கு சென்ற வெங்கடேஷ்க்கு, அப்படி ஒரு நபர் போலீசாக வேலை செய்யவில்லை என தெரிந்தது.மர்ம நபரை, போலீசார் தேடுகின்றனர்.