ADDED : அக் 25, 2024 12:40 AM
மாம்பலம்,
தி.நகர் பாலாஜி கோவில் தெருவைச் சேர்ந்தவர், முத்து, 29; கார் ஓட்டுனர். இவரும் இவரது மனைவியும் வேலைக்குச் சென்றபோது, வீட்டை பூட்டி சாவியை வெளியே வைத்து விட்டுச் சென்றனர்.
பணி முடிந்து மாலை வீட்டிற்கு வந்து பீரோவை பார்த்த போது, அதில் வைத்திருந்த, 90,000 ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம், 3 கிராம் தங்க மோதிரம் மற்றும் 2,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது.
மாம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இதேேபால, எம்.ஜி.ஆர்., நகர் சூளைப்பள்ளத்தைச் சேர்ந்தவர் கணேஷ், 31; தனியார் நிறுவன ஊழியர்.
தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, பெற்றோர் பணிக்கு சென்ற நிலையில், இவரும் வீட்டை பூட்டி, சாவியை வெளியே வைத்துவிட்டு, பணிக்கு சென்றார்.
பின், மாலை கணேஷின் தாய் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 3 சவரன் நகை, வெள்ளி விளக்கு, டம்ளர் மற்றும் 3,800 ரூபாய் திருடு போனது தெரிந்தது.
போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.

