/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரும் 30ல் நடக்கிறது சிறார் மாநில செஸ்
/
வரும் 30ல் நடக்கிறது சிறார் மாநில செஸ்
ADDED : நவ 12, 2024 07:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:முகப்பேரில் நடக்க உள்ள சிறுவர்களுக்கான மாநில செஸ் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
'ஏ - மேக்ஸ்' அகாடமி சார்பில், 5வது மாநில அளவிலான செஸ் போட்டி, முகபேரில் உள்ள டெக்லத்தான் மைதானத்தில், வரும் 30ம் தேதி நடக்கிறது. இதில், எட்டு, 10, 12, 15 மற்றும் 25 வயதுக்கு உட்பட இருபாலருக்கும் தனித்தனியாக நடக்கிறது.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, 153 கோப்பைகள், 50க்கு மேற்பட்ட பதக்கங்களை வழங்கப்பட உள்ளன. 'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில் போட்டிகள் நடக்கிறது.
பங்கேற்க விரும்புவோர், 90252 45635, 94453 32977 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.