/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கபடி போட்டி எஸ்.ஆர்.எம்., 'கில்லி'
/
கபடி போட்டி எஸ்.ஆர்.எம்., 'கில்லி'
ADDED : செப் 28, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பட்டுரசு கபடி கழகம் சார்பில், மாநில அளவிலான கபடி போட்டி, திருவாரூர் மாவட்டம், பைங்காநாடு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், நேற்று முன்தினம் நடந்தது.
போட்டியில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கல்லுாரிகள், கிளப் அணிகள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தின.
இதில், அரையிறுதியில் சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, 29 - 13 என்ற புள்ளிக்கணக்கில், ஆலத்தங்கரை கபடி கிளப்பை தோற்கடித்தது.
இறுதிப்போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, 32 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வடுவூர் கபடி கிளப் அணியை வீழ்த்தி, முதலிடத்தை பிடித்து கோப்பையை வென்றது.