/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புது மெட்ரோ வழித்தடத்தில் காளியம்மன் நிலையம் நீக்கம்
/
புது மெட்ரோ வழித்தடத்தில் காளியம்மன் நிலையம் நீக்கம்
புது மெட்ரோ வழித்தடத்தில் காளியம்மன் நிலையம் நீக்கம்
புது மெட்ரோ வழித்தடத்தில் காளியம்மன் நிலையம் நீக்கம்
ADDED : ஜூலை 04, 2025 12:46 AM
சென்னை, சென்னையில் மாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ புது வழித்தடத்தில், காளியம்மன் கோவில் தெரு நிலையம் நீக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது, இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் மூன்று வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. இதில், மாதவரம் -- சோழிங்கநல்லுார் வழித்தடத்தில், திருமங்கலம் அடுத்து வி.ஆர்.வணிக வளாகத்தின் பின் பகுதியில் வளைந்து, கேந்திரிய வித்யாலயா வழியாக தே.மு.தி.க., அலுவலகத்தை கடந்து, கோயம்பேடு செல்லும் வகையில் இருந்தது.
இதற்கிடையே, கேந்திரிய வித்யாலயாவில் இருந்து வளைந்து செல்லாமல் நேரடியாக கோயம்பேடு மெட்ரோ நிலையத்துக்கு செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், காளியம்மன் கோவில் தெரு நிலையம் நீக்கப்பட்டுள்ளது. இதனால், பெரியளவு போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:
இந்த மாற்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டது. இந்த மாற்றத்தின்படி, கோயம்பேடில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. தற்போது எந்த புதிய மாற்றமும் செய்யவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.