/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' கலைமகள் ' ஆசிரியரின் தந்தை மரணம்
/
' கலைமகள் ' ஆசிரியரின் தந்தை மரணம்
ADDED : நவ 09, 2024 12:36 AM

சென்னை,
'கலைமகள்' ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியனின் தகப்பனார் டி.எஸ்.சிவசைலம் நேற்று முன்தினம் இரவு இறைவனடி சேர்ந்தார். அன்னாரது இறுதிச் சடங்கு, சென்னை மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் நேற்று நடந்தது.
டி.எஸ்.சிவசைலம், கல்லுாரி நாட்களில் 'தி.ச.பெருஞ்சேரல்' என்கிற பெயரில் கதை கட்டுரைகள் எழுதியவர். 'சுந்தரம் பைனான்ஸ்' நிறுவனத்தில் இன்சூரன்ஸ் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர்.
தொழிற்சங்க முன்னோடிகளான ராமானுஜம் பொம்மை ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவர், பல மாநாடுகளையும் வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார். நிர்வாகத்திற்கும் பணியாளர்களுக்கும் இணைப்பு பாலமாக விளங்கியவர்.
இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உண்டு. இவருடைய மூத்த மகன் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் 'கலைமகள்' மாத இதழ் ஆசிரியர். மற்ற பிள்ளைகள் எஸ்.சங்கரநாராயணன், எஸ்.சங்கரராமநாதன் மற்றும் உமா சங்கர்.