கல்பாக்கம் முன்மாதிரி வேக ஈனுலை முதலாவது செயல்பாட்டை அடைந்தது
கல்பாக்கம் முன்மாதிரி வேக ஈனுலை முதலாவது செயல்பாட்டை அடைந்தது
ADDED : ஏப் 07, 2026 10:01 PM
சென்னை:மத்திய அரசின், 'பாவினி' எனப்படும், 'பாரதிய நபிக்யா வித்யூத் நிகம்' நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில், 500 மெகா வாட் திறனில் பி.எப்.பி.ஆர்., அதாவது, 'புரோடோடைப் பாஸ்ட் பிரீடர் ரீஆக்டர்' எனப்படும், விரைவு ஈனுலை மின் நிலையம் அமைத்து வருகிறது.
இதுவே, நம் நாட்டின் முதல் விரைவு ஈனுலை மின் திட்டம். இந்த மின் திட்டத்தில், இந்தியாவில் அதிகம் கிடைக்கும் தோரியம் பயன்படுத்தப்பட உள்ளது.
விரைவு ஈனுலை மின் நிலையத்தில் இம்மாதம், 6ம் தேதி இரவு, 8:25 மணிக்கு, முதலாவது அணுப்பிளவு செயல்பாட்டு நிலையை எட்டியது. இது, நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை வழங்குவதிலும், உள்நாட்டு அணுமின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்துவதிலும் சிறப்புமிக்க செயல்முறை.
அணுசக்தி ஆணையம் அணுமின் உற்பத்தி நிலைய கட்டமைப்புகளின் பதுகாப்பு முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின், மத்திய அணுசக்தி துறை செயலர் அஜித்குமார் மொகந்தி, இந்திய அணுசக்தி ஆணையத்தின் இயக்குனர் ஸ்ரீகுமார், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் பிள்ளை, பாவினி முதன்மை மேலாண் இயக்குனர் அல்லு ஆனந்த் முன்னிலையில், இது செயல்படுத்தப்பட்டது.
*
