/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்யாண் ஜுவல்லர்ஸ் இரு ஷோரூம் திறப்பு
/
கல்யாண் ஜுவல்லர்ஸ் இரு ஷோரூம் திறப்பு
ADDED : பிப் 02, 2025 12:42 AM

சென்னை,'கல்யாண் ஜுவல்லர்ஸ்'சின் புதிய இரு ேஷாரூம்களை நடிகர் பிரபு, சென்னையில் திறந்து வைத்தார்.
நாட்டில் தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனையில், முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக 'கல்யாண் ஜுவல்லர்ஸ்' உள்ளது.
வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, நவீன டிசைன்களை அறிமுகம் செய்வதோடு, புதிய கிளைகளை திறந்து வருகிறது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 310 கிளைகளுடன் செயல்படும் இந்நிறுவனத்தின் புது ேஷாரூம்களை புரசைவாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரியில் நடிகர் பிரபு திறந்து வைத்தார்.
இது குறித்து, நடிகரும், கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பர துாதருமான பிரபு கூறுகையில், ''கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையும் பெற்று விளங்குகிறது; புது ேஷாரூம்களே இதற்கு உதாரணம்,'' என்றார்.
இது குறித்து, கல்யாண் ஜுவல்லர்ஸ் செயல் இயக்குனர் ரமேஷ் கல்யாணராமன் கூறியதாவது:
வாடிக்கையாளர்களுக்கு புது அனுபவத்தை வழங்கும் வகையில், கூடுவாஞ்சேரி, புரசைவாக்கத்தில் இரண்டு ஜுவல்லரி திறந்துள்ளோம். நகைகளில் தனித்துவ நுட்பமும், வடிவமைப்புகளில் தரம் வழங்குகிறோம்.
காதலர் தினத்தையொட்டி, கல்யாண் ஜுவல்லர்ஸ் கடைகளில், புதிய டிசைன்களில் நகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நகைகளில் செய்கூலியில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும்.
ஜன., 25 முதல் நவ., 9ம் தேதி வரை, இந்த சலுகை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.