தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விருப்ப மனு கட்டணத்தை திரும்ப கொடுக்கிறார் கமல்

 விருப்ப மனு கட்டணத்தை திரும்ப கொடுக்கிறார் கமல்

 விருப்ப மனு கட்டணத்தை திரும்ப கொடுக்கிறார் கமல்


ADDED : ஏப் 07, 2026 10:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 10:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'மக்கள் நீதி மய்யம் சார்பில், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கியவர்கள், அதற்கான கட்டணத்தை இன்று முதல் திரும்ப பெறலாம்' என, மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், கமலின் மக்கள் நீதி மய்யம் அங்கம் வகித்து வருகிறது. தேர்தலில் போட்டியிட, மக்கள் நீதி மய்யம் சார்பில், நிர்வாகிகள் விருப்ப மனு வழங்கினர்.

இதற்காக, தலா, 50,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது; 60 பேர் விருப்ப கட்டணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட, ம.நீ.ம.,வுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.

ஆனாலும், 50,000 ரூபாய் கட்டணம் செலுத்தி, விருப்ப மனு வழங்கியவர்களுக்கு, அந்த தொகை திருப்பி தரப்படாது என்றும், அக்கட்டணம் கட்சி வளர்ச்சி நிதிக்கு பயன்படுத்தப்படும் என்றும், கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து, விருப்ப மனு கட்டணத்தை, இன்று முதல் வரும் 16ம் தேதி வரை, கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என, மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us