/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளிக்கு காஞ்சி மடாதிபதி வருகை
/
மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளிக்கு காஞ்சி மடாதிபதி வருகை
மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளிக்கு காஞ்சி மடாதிபதி வருகை
மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளிக்கு காஞ்சி மடாதிபதி வருகை
ADDED : அக் 05, 2025 12:29 AM

மடிப்பாக்கம், மடிப்பாக்கத்தில் உள்ள பிரின்ஸ் பள்ளிக்கு, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று வருகை தந்தார்.
சென்னை, மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளிக்குழுமத்தில் 2024 - 25ம் கல்வியாண்டில் பயின்று, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கு முறையே 5,000, 3,000, 2,000 ரூபாய் பரிசு தொகை வழங்கி, காஞ்சி மடாதிபதி அருளாசி வழங்கினார்.
பின், அவர் கூறியதாவது:
மனிதகுல மேம்பாட்டிற்கு கல்வி மிக முக்கியமானது. அதை, உத்தியோகம், வியாபாரம், பொது நிர்வாகத்திற்கு அறிவியல், வரலாறு, கணிதம் போன்ற பாடங்களை படிப்பது ஒரு வகை.
மனிதர்களின் நல்ல எண்ணம், நல்ல ஒழுக்கத்தோடு படிப்பு மற்றும் குணங்களை கொடுக்க ஆன்மிகம் சார்ந்த பக்தி, அன்னதானம், கோவில் கும்பாபிஷேகம் போன்ற நற்பண்புகளை கற்பது மற்றொரு வகை.
இதை கற்ற பெரியோர், மக்களுக்கு போதிப்பதை சத்சங்கம் என்பர். அது மடிப்பாக்கத்தில், மடிப்பாக்கம் சத்சங்கமாக பல ஆண்டுகள் இயங்கி வருகிறது.
விதையின் பலன் அது வளர்ந்த பின்பே தெரியும்; அதைப்போலத் தான் கல்வி.
கல்வி, கலை, கலாசாரம், சேவை, பண்பாடோடு இணைந்து இருக்க வேண்டும். அதை, பிரின்ஸ் கல்வி குழுமம் சீரிய முறையில் செய்து வருகிறது.
இவ்வாறு காஞ்சி மடாதிபதி அருளாசி வழங்கினார்.
முன்னதாக, பிரின்ஸ் கல்விக் குழுமத் தலைவர் டாக்டர் வாசுதேவன், காஞ்சி மடாதிபதியை வரவேற்றார்.
நிகழ்ச்சியில், துணைத் தலைவர்கள் விஷ்ணு கார்த்திக், பிரசன்ன வெங்கடேஷ், செயலர் ரஞ்சனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.