/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில விளையாட்டு போட்டி காஞ்சி அணிக்கு 14 பதக்கம்
/
மாநில விளையாட்டு போட்டி காஞ்சி அணிக்கு 14 பதக்கம்
ADDED : மார் 27, 2025 11:53 PM

காஞ்சிபுரம், மாநில அளவில், மாற்றுத்திறனாளிகளுக்கான 15வது வீல் சேர் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரத்தில் நடந்தது.
தமிழ்நாடு வீல் சேர் பென்சிங் அசோசியேஷன் தலைவர் மலர்கொடி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட பயிற்சியாளர் ஜோசப், சுரேஷ் நுாருதீன் முன்னிலை வகித்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு பிரிவு போட்டிகளில், காஞ்சிபுரம் மாவட்ட அணி சார்பில், லோகநாதன் தலைமையில், 30 வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், பல்வேறு பிரிவு போட்டிகளில், 5 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கல பதக்கம் என மொத்தம் 14 பதக்கங்கள் வென்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற வீரர்கள், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியை, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.