ADDED : அக் 25, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் செய்தனர்.
வடபழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா, 22ம் தேதி லட்சார்ச்சனையுடன் துவங்கியது. விழாவில் நேற்று மாலை, மயிலை கற்பகாம்பாள் கோவில் கல்லுாரி, காஞ்சி ஏகம்பரநாதர் கோவில் பள்ளியை சேர்ந்த, 108 மாணவியர் இணைந்து கந்தசஷ்டி பாராயணம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், எம்.எல்.ஏ.,க்கள் வேலு, கருணாநிதி, கோவில் துணை கமிஷனர் ஹரிஹரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

