தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கர்நாடகா 'அல்போன்சா' கிலோ ரூ.130!

கர்நாடகா 'அல்போன்சா' கிலோ ரூ.130!

கர்நாடகா 'அல்போன்சா' கிலோ ரூ.130!


ADDED : ஏப் 14, 2025 02:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2025 02:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில், அல்போன்சா, பங்கனபள்ளி, தோத்தாபுரி, ஜவாரி, செந்துாரா, நீலம், காலாப்பாடி, பெங்களூரா உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட மாம்பழ ரகங்கள் விளைகின்றன.

கோடை காலமான மே மாதத்தில் மாம்பழங்கள் அறுவடை துவங்கும். தற்போது மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், முன்கூட்டியே மாம்பழம் சீசன் துவங்கியுள்ளது.

இதனால், கோயம்பேடு சந்தைக்கு, அல்போன்சா ரக மாம்பழங்கள் வரத்து துவங்கியுள்ளது. கிலோ 130 முதல் 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இது மட்டுமின்றி, 5 கிலோ மாம்பழங்கள் அட்டை பெட்டியில் அடைத்து, 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில், இம்மாத இறுதியில் மாம்பழ அறுவடை துவங்கும் என்பதால், வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us