/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அலைமோதிய மக்கள் வெள்ளத்தால் களைகட்டிய காசிமேடு மீன் சந்தை
/
அலைமோதிய மக்கள் வெள்ளத்தால் களைகட்டிய காசிமேடு மீன் சந்தை
அலைமோதிய மக்கள் வெள்ளத்தால் களைகட்டிய காசிமேடு மீன் சந்தை
அலைமோதிய மக்கள் வெள்ளத்தால் களைகட்டிய காசிமேடு மீன் சந்தை
ADDED : டிச 29, 2025 06:56 AM

சென்னை: காசிமேடு மீன் சந்தையில், பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் நேற்று அதிகாலை முதலே, மக்கள் கூட்டம் அலைமோதியது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு, ஞாயிற்றுக்கிழமை சென்னை மற்றும் புறநகரில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீன்கள் வாங்க வருகை தருவர். அந்தவகையில் மார்கழி பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் நேற்று அதிகாலை முதலே, காசிமேடு மீன் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற 40க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பின. மீன்களின் வரத்து அதிகமாக இருந்ததால், விலை சற்று குறைவாக இருந்தது.
வஞ்சிரம் கிலோ 800 ரூபாய்க்கும், சங்கரா 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. குறிப்பாக, வாளை மீன் வரத்து அதிகமாக இருந்தது. தொழிற்சாலைக்கும், கருவாட்டிற்கும் ஒரு கிலோ வாளை மீன் 50 ரூபாய் முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், 'கடந்த ஒரு மாதமாக மூன்று வகையான வாளை மீன் அதிகளவில் கிடைக்கிறது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்' என்றனர். மற்ற மீன் வகைகள் குறைந்த அளவு விற்பனைக்கு வந்ததால், விலை உயர்ந்து காணப்பட்டது.
மீன் விலை நிலவரம் வகை கிலோ (ரூ.) வஞ்சிரம் 800 - 1,000 கறுப்பு வவ்வால் 900 - 1,000 வெள்ளை வவ்வால் 1,000 - 1,100 ஐ வவ்வால் 1,300 - 1,600 பாறை 400 - 500 சங்கரா 400 - 500 கடல் விரால் 600 - 650 நெத்திலி 350 - 400 கானங்கத்த 150 - 200 கடம்பா 400 - 500 நண்டு 400 - 500 வரி நண்டு 600 - 700 இறால் 500 - 550 டைகர் இறால் 900 - 1,100

