/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காற்றாடி திருவிழா ஆக., 14க்கு மாற்றம்
/
காற்றாடி திருவிழா ஆக., 14க்கு மாற்றம்
ADDED : மே 15, 2025 12:35 AM
சென்னை, இம்மாதம் 21ம் தேதி நடக்கவிருந்த, சர்வதேச பட்டம் விடும் திருவிழா வரும் ஆக., 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில், வெளி நாட்டு சுற்றுலாப் பயணியரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் சர்வதேச அளவில் பலுான் மற்றும் பட்டம் விடும் திருவிழா, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டிற்கான நான்காவது பட்டம் விடும் திருவிழா, இம்மாதம் 21ம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில், பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட எட்டு நாடுகளை சேர்ந்த, காற்றாடி தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது கலாசாரத்தை பிரதிபலிக்கும் காற்றாடிகளுடன் பங்கேற்பர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றமான சூழலைக் கருதி, சர்வதேச பட்டம் விடும் திருவிழா, தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டு, ஆக., 14 முதல் 17ம் தேதி வரை, நான்கு நாட்கள் நடத்தப்படும் எனவும், சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.