sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மே மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது கத்திவாக்கம் 'டிஜிட்டல்' கிளை நுாலகம்

/

மே மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது கத்திவாக்கம் 'டிஜிட்டல்' கிளை நுாலகம்

மே மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது கத்திவாக்கம் 'டிஜிட்டல்' கிளை நுாலகம்

மே மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது கத்திவாக்கம் 'டிஜிட்டல்' கிளை நுாலகம்


ADDED : மார் 14, 2024 12:27 AM

Google News

ADDED : மார் 14, 2024 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணுார், எண்ணுார், கத்திவாக்கம் பஜாரில் 1962ல் கிளை நுாலகம், 640 சதுர அடி பரப்பிலான சிறிய கட்டடத்தில் துவக்கப்பட்டது. நுாலகத்தில், 46,000 புத்தகங்களும், 4,501 உறுப்பினர்களும், 16 புரவலர்களும் உள்ளனர். தினமும் 100க்கும் மேற்பட்டோர் நுாலகத்தை பயன்படுத்தி வந்தனர்.

பழமை காரணமாக, இந்த நுாலக கட்டடம் சேதமடைந்து மழை காலங்களில் ஒழுகியது. இதனால், பல்லாண்டு பொக்கிஷங்களான புத்தகங்கள் வீணாகின. மேலும், இடநெருக்கடியும் ஏற்பட்டது.

பவள விழா கண்ட நுாலகம், கேட்பாரற்று கிடப்பது குறித்து, முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.பி.சாமியிடம், கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி, 2018ல், புதிய டிஜிட்டல் கிளை நுாலகம் கட்ட, 55 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், பல்வேறு காரணங்களால் கட்டடப் பணிகள் துவக்கப்படாத நிலையில், 2020ல், அவர் உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். அதை தொடர்ந்து, நுாலக பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

இந்நிலையில், அவருடைய தம்பி கே.பி.சங்கர், எம்.எல்.ஏ.,வாகி, தன் மேம்பாட்டு நிதியான, 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய டிஜிட்டல் கிளை நுாலகம் கட்டும் பணிக்கு, கடந்தாண்டு ஆக., 23ம் தேதி அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார்.

அதன்படி, 3,179 சதுர அடி பரபரப்பளவில், 12 பிரிவுகள் அடங்கிய டிஜிட்டல் கிளை நுாலக கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

இது குறித்து, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ஜெயகுமார் கூறுகையில், ''கத்திவாக்கம் டிஜிட்டல் கிளை நுாலக கட்டடப் பணிகள், 75 சதவீதம் அளவிற்கு முடிந்தது. பூச்சு வேலைகள் பாக்கியுள்ளன.

''குறித்த காலத்திற்கு முன்பே, பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், மே மாதம் நுாலகம் பயன்பாட்டிற்கு கொண்டு வர, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றனர்.






      Dinamalar
      Follow us