ADDED : பிப் 06, 2026 05:33 AM
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தில் உள்ள, இந்தியன் ஆயில் நிறுவன டீலரான, கவிதா ஏஜன்சி அளித்துள்ள விளக்கம்:
கடந்த ஜன., 2ல், எங்கள் பெட்ரோல் 'பங்க்'கில், வாடிக்கையாளர் ஒருவர், 15 லிட்டர் கொள்ளளவு உள்ள தன் பல்சர், 150 சி.சி., பைக்கின் டேங்கில், 19.75 லிட்டர் பெட்ரோல் நிரப்பியதாக, கருவியில் காண்பிப்பதாக, வேதனை தெரிவித்தார்.
'ஆட்டோமேஷன்' பதிவுகள், 'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில், முறைகேடு அல்லது அளவு குளறுபடிகள் ஏதும் நடக்க வில்லை என்பது உறுதியானது. சம்பவம் குறித்து, போலீசில் புகார், வழக்கு பதிவு இல்லை.
வாகன உற்பத்தி நிறுவனம் குறிப்பிடும் எரிபொருள் கொள்ளளவு, டேங்கின் முழு கொள்ளளவு அல்ல. பாதுகாப்பாக எரிபொருள் நிரப்ப மதிப் பிடப்பட்ட கொள்ளளவே.
டேங்கின் உண்மையான கொள்ளளவு, நீராவி விரிவாக்கத்திற்கான பகுதியுடன் பெரியதாக இருக்கலாம். தானியங்கி, 'கட் - ஆப்' தாண்டி, அதிக எரிபொருள் நிரப்புதல் சாத்தியம்தான்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

