/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதையில் எஸ்.ஐ.,யிடம் தகராறு 'கீ போர்டு' இசை கலைஞர் கைது
/
போதையில் எஸ்.ஐ.,யிடம் தகராறு 'கீ போர்டு' இசை கலைஞர் கைது
போதையில் எஸ்.ஐ.,யிடம் தகராறு 'கீ போர்டு' இசை கலைஞர் கைது
போதையில் எஸ்.ஐ.,யிடம் தகராறு 'கீ போர்டு' இசை கலைஞர் கைது
ADDED : மே 17, 2025 12:15 AM

சென்னை,விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் தெரு - ரெட்டி தெரு சந்திப்பில், விருகம்பாக்கம் போக்குவரத்து எஸ்.ஐ., ரியாஸ் அகமது, வாகன தணிக்கையில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த 'ஹூண்டாய் ஐ-20' காரை நிறுத்திய ரியாஸ் அகமது, ஓட்டுநர் மது அருந்தியுள்ளாரா இல்லையா என்பதை கண்டறியும் சோதனை மேற்கொண்டார்.
அதற்கு கார் ஓட்டுநர் கவியரசன், 40, தன் ஒரு மாமா சி.பி.ஐ.,யில் அதிகாரியாகவும், மற்றொரு மாமா அ.தி.மு.க.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., எனவும் கூறி, அவரை மிரட்டியுள்ளார்.
மது போதையில் அவர் அநாகரிகமாக பேசியதை, சட்டையில் உள்ள கேமரா வாயிலாக எஸ்.ஐ., பதிவு செய்தார். இதையறிந்த ஓட்டுநர், எஸ்.ஐ.,யை கீழே தள்ளிவிட்டதால் அவரது கையில் லேசான காயம் ஏற்பட்டது.
எஸ்.ஐ., ரியாஸ் அகமது புகாரின்படி, சட்டம் - ஒழுங்கு போலீசார் அவரை கைது செய்தனர்.
போலீசார் விசாரணையில், கவியரசன், இசை கலைஞர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி உள்ளிட்ட பலருக்கு 'கீ போர்டு' இசை வாசிப்பாளராக இருப்பது தெரியவந்தது.